சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகம் சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சிறப்பு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் சில புத்தகங்களை எழுத்தாளர் ரெங்கையா முருகன் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் சில இதோ…
1. ஆஷ் கொலை வழக்கு சம்பந்தமான Tinnevely Riots Conspiracy of Ash murder.
2. ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த ஹண்டர் அறிக்கை.
3. மகான் அரவிந்தர் 1907-08 ல் நடத்திய வந்தேமாதரம் பத்திரிகை – இதில் பெரியவர் வ.உ.சி. குறித்த தூத்துக்குடி அரசியல் நிகழ்வுகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் இடம் பெற்றுள்ளது.
4. ஐ.என்.ஏ. போராட்டத்தில் பங்கு கொண்டவர்களது வாழ்க்கை குறிப்புகள்.
5. சுபாஷ் சந்திர போஸ் அவர்களை காந்தியடிகளால் வழிகாட்டப்பட்ட சி.ஆர். தாஸ் வாழ்க்கை வரலாறு.
6. தாதா பாய் நவுரோஜி எழுதிய பிரிட்டிஷ் ஆட்சியின் வற்றடிக்கும் கொள்கையை (Drain Theory) விளக்கும் மிக முக்கியமான பொருளாதார நூல்.
7. ரமேஷ் சந்திர தத் எழுதிய ஆகச் சிறந்த பொருளாதார நூல்.
வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இந்த அரிய கண்காட்சியை வந்து கண்டு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.