பெண்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹை ஹீல்ஸ் ஆரம்பக் காலத்தில் ஆண்கள் பயன்படுத்தும் காலணியாக இருந்துள்ளது.
இந்த விஷயம் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், இது உண்மையும் கூட. ஆண்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஹை ஹீல்ஸ் ஆண்கள், போர் சமயங்களிலும் குதிரை ஏற்றத்தின்போதும் அணிந்து கொள்வதாக கூறப்படுகிறது.
குதிரையில் செல்லும்போது நல்ல கிரிப்பாக இருக்க இந்த மாதிரியான காலணிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.
இந்த வகை காலணிகள் முதல் முறையாக 1599 ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் ஷா அப்பாஸ் காலத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அவர் ஐரோப்பிற்கு செல்லும்போது இப்படியாக உயரம் அதிகம் கொண்ட காலணிகளை அணிந்து சென்றுள்ளார். அதன் பின்பு ஐரோப்பாவில் இந்த காலனி ட்ரெண்டானதும் பல நாடுகள் இதை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பெரும்பாலும் அந்த காலத்தில் அரசர்களே இந்த ஹை ஹீல்ஸ்-ஐ அதிக அளவில் அணிந்து வந்துள்ளனர்.
பிரான்ஸ் மன்னர் லூயிஸ் XIV என்பவர் 10 இன்ச் உயரம் கொண்ட ஹீல்ஸ் அணிவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இதற்குக் காரணம் அவரின் 4 அடி 5 அங்குல உயரம் தான்.
மேலும் 1740 களுக்கு பிறகுதான் பெண்கள் இவ்வாறான ஹீல்ஸ் கொண்டக் காலணிகளை அணிய ஆரம்பித்தனர்.
காலப்போக்கில் ஆண்கள் இந்த வகை செருப்புகளை கைவிட்டனர். அதற்கு பிறகு அதன் வடிவத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
ஆனால், இந்த ஹீல்ஸ் செருப்பு அணிவது இடுப்பு, முதுகு, முட்டி போன்றவற்றிற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
– சங்கீதா