விருஷபா படத்தில் இணைந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்!

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆஸ்கர் விருதுகளை வென்ற Moonlight (2016), Three Billboards Outside Ebbing மற்றும் Missouri (2017) போன்ற பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்ததோடு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் புகழ்பெற்றவர் நிக் துர்லோவ்.

ஹாலிவுட் பிரபலமான அவர் இணைந்திருப்பதால், விருஷபா படத்தின் தரம் இந்திய அளவை தாண்டி ஹாலிவுட் அளவில் இருக்கும்.

படத்தின் தரம் மற்றும் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக, தயாரிப்பாளர்கள் 57 வினாடிகள் கொண்ட ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர்.

இதில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில், பிரமாண்ட செட் அமைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஹாலிவுட் தயாரிப்பாளர் நிக் துர்லோவ், “விருஷபா படத்தில் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு நிர்வாக தயாரிப்பாளராக, திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் நான் கவனம் செலுத்துவேன்.

எனது நாட்டுக்கு வெளியே, ஒரு பன்மொழித் திரைப்படத்தில், பணிபுரிவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் விஷால் குர்னானி, “ எங்களுடன் நிக் துர்லோவ் இணைந்திருப்பதால், எங்கள் படம் எவ்வளவு பெரிய பட்ஜெட்டில், எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதை ஒருவர் உணர முடியும்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தயாரிக்கப்படும் முதல் இந்தியப் படங்களில் விருஷபா ஒன்றாக இருக்கும்” என்று உற்சாகமாகப் பேசினார்.

ஸ்ரீகாந்த் மேகா, ராகினி திவேதியுடன் மெகாஸ்டார் மோகன்லால் & ரோஷன் மேகா, ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா S கான் ஆகியோர் நடிக்கும் இந்தியாவின் மிகப் பிரமாண்டமான ஆக்சன் மற்றும் VFX காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக இருக்கும்.

Comments (0)
Add Comment