நாம் இந்த உலகத்தில் பிறக்க உயிர் கொடுத்து காப்பது பெற்றோர்கள். பெற்றோர்களுக்கு பிறகு நாம் உயிர் வாழத் தேவையான துணை நண்பர்கள்.
காதல் பண்ணாம சிங்களா கூட இருக்கலாம். ஆன பிரெண்ட்ஸ் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது.
பெற்றோர்களிடம் பகிர முடியாத விஷயங்கள், தாங்க முடியாத மனக் கஷ்டங்கள் என அனைத்தையும் பகிர, கலாய்த்தால் சிரிக்க, அடித்தால் தாங்க என நம்முடன் இருக்கும் ஒரே உறவு பிரெண்ட்ஸ்.
நம்ம எவ்ளோ தான் கஷ்டப்படுத்தினாலும், கண்டுக்காமல் இருந்தாலும் அதெல்லாம் பெருசாக எடுத்துக்காம நம்ம கூடவே இருக்கும் அந்த உறவுதான் நட்பு.
இந்த வாழ்க்கை நமக்கு எப்போ ஸ்பெஷலா தெரியும்னு தெரியுமா?.
நமக்காக ஒருத்தவங்க அவங்க நேரத்தை தரும்போது தான். நாம செலுத்துற அன்பு சிலபேர் கிட்ட இருந்து உண்மையான அன்பு திரும்பி வரும்போது தான். அந்த அன்பு நாம் சோர்ந்துபோய் அழும்போது ‘உனக்கு நான் இருக்கேன்’ என்ற வார்த்தை வரும் ஒரே ஒரு பிரெண்ட்ஸ் இருந்தாலே போதும்.
பக்கத்துல இருக்கும் வரை அந்த உறவோட அருமை தெரியாது.
கொஞ்சம் விலகி போனாலும் அந்த இடம் வெற்றிடமாக மாறிவிடும்.
அதை நிரப்ப வேறு யாராலும் முடியாது.
நம்ப என்ன செஞ்சாலும் அதை பெருசாக எடுத்துக்காமல் நம்மல நேசிக்கின்ற அந்த உறவு கிடைக்கிறதெல்லாம் லக்கு. அந்த பொக்கிஷத்தை நழுவ விடாதீர்கள்.
நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் தவறாக நடக்கும் போது நம் நம்பிக்கையை அதிகரிக்க, மனச்சோர்விலிருந்து நாம் மீள ஒரே ஒரு உண்மை நண்பன் இருந்தால் போதும் எப்பேர்பட்ட துன்பத்தையும் மறந்து இன்பமாக நொடிப்பொழுதில் மாற்றும் சக்தி நண்பர்களுக்கு உண்டு.
நரகத்திலிருந்தாலும் நண்பர்களுடன் இருந்தால் அதுதான் சொர்க்கம். நட்பு எனும் பேருந்தில் அவன்/அவள் வாழ்க்கையில் நாம் முழுமையாக பயணிக்க முடியுமா என்று தெரியவில்லை.
நான் இருக்கிறேனோ இல்லையோ அவன் / அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் நபராக பிரெண்ட்ஸ் தான் இருப்பார்கள்.
ஆயுள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களைக் கொண்ட அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
– வைஷ்ணவி பாலு