சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm மூலம் டிக்கெட் செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்தது மெட்ரோ நிறுவனம். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார்.
Paytm செயலில் ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் டிக்கெட் பெறும் வசதி உள்ள நிலையில் தற்போது சென்னையில் இந்த திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.
Paytm செயலில் transit பகுதியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்ற option உள்ளது. அதில் புறப்படும் இடம் மற்றும். சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.
வழக்கம்போல் மெட்ரோ டிக்கெட் பெறும் முறையிகளில் 20% கட்டண தள்ளுபடி உள்ளது போல புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள paytm செயலிலும் வழங்கப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முதல்கட்ட திட்டத்தில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரயில் தொடர்களில் இணைப்பு பெட்டிகளை இணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அதனால் மாற்று வழியாக கூடுதலாக 28 ரயில் தொடர்களை வாங்க முடிவு செய்துள்ளோம். 2 வருடங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.
மெட்ரோ அடையாள அட்டை புதிதாதக யாருக்கும் வழங்கவில்லை. பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ பார்க்கிங்கில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ பயணிகளின் வாட்ஸ் அப்பை மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில் paytm மூலம் டிக்கெட் செய்யும் முறை மெட்ரோ பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
– தேஜேஷ்