மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?

கருத்துக் கணிப்பு முடிவுகள்!

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதனை எதிர்கொள்ள ஆளும் பாஜகவும் முழு வீச்சில் தயாராகி விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் சில புதிய கட்சிகளையும் சேர்த்து கோதாவில் குதிக்க, பாஜகவும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

பாஜக அணியில் இப்போது 38 கட்சிகள் உள்ளன. தேர்தல் நெருக்கத்தில் மேலும் சில கட்சிகள் இணையலாம்.

மீண்டும் மோடி?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், இந்தியா டிவி செய்தி சேனலும், சி என் எக்சும் இணைந்து, நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியது.

அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 318 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், மோடி மூன்றாம் முறையாக பிரதமராவார் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ அணிக்கு 175 இடங்கள் கிடைக்கும்.
இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் (ஒய்.எஸ்.ஆர், தெலுங்கு தேசம், பி.ஆர்.எஸ். பிஜு ஜனதா தளம் போன்றவை) 50 தொகுதிகளில் வாகை சூடும்.

கடந்த தேர்தலில் பாஜக தனித்து 303 தொகுதிகளை வென்றிருந்தது. இந்த முறை 290 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதாவது, இந்த தேர்தலில் பாஜக 13 தொகுதிகளை இழக்கும். ஆனால் காங்கிரஸ் தனது ஆதரவை அதிகரிக்கும்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் கிடைத்தன. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தனித்து 66 தொகுதிகளை பிடிக்கும். 14 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும்.

திமுக – அதிமுகவுக்கு எத்தனை?

மாநில வாரியாக ஒவ்வொரு அணிக்குக் கிடைக்கும் இடங்கள் பட்டியலையும் இண்டியா டிவி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு 9 தொகுதிகள் கிடைக்கும். இதில் அதிமுக மட்டும் 8 இடங்களில் வெல்லும் என அந்தக் கணிப்பு சொல்கிறது.

திமுக இடம் பெற்றுள்ள இந்தியா அணி 30 இடங்களில் வாகை சூடும். திமுக தனித்து 19 தொகுதிகளைக் கைப்பற்றும்.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளை அடுத்து மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும்.

கடந்த தேர்தலில் அந்த கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது 29 தொகுதிகளை வெல்லும் என கணிப்பில் தெரிய வந்துள்ளது.

முழு முடிவுகள்:

கருத்துக் கணிப்பின் முழு முடிவுகளை மாநில வாரியாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடு:
மொத்தம் -39
பாஜக – 9
இந்தியா -30

உத்தரபிரதேசம்:
மொத்தம் – 80
பாஜக – 73
இந்தியா – 7

மகாராஷ்டிரா:
மொத்தம் – 48
பாஜக – 24
இந்தியா -24

மே.வங்கம்:
மொத்தம் – 42
பாஜக – 12
இந்தியா – 30

பீகார்:
மொத்தம் -40
பாஜக – 24
இந்தியா -16

மத்தியபிரதேசம்:
மொத்தம் -29
பாஜக – 24
இந்தியா -5

கர்நாடகா:
மொத்தம் -28
பாஜக -20
இந்தியா -7

குஜராத்:
மொத்தம் –26
பாஜக -26
இந்தியா – 0

கேரளா:
மொத்தம் -20
பாஜக -0
இந்தியா -20

ராஜஸ்தான்:
மொத்தம் – 25
பாஜக -21
இந்தியா -4

ஆந்திரா:
மொத்தம் -25
பாஜக -0
இந்தியா -0
ஒய்.எஸ்.ஆர். -18
தெலுங்கு தேசம்-7

தெலங்கானா:
மொத்தம் -17
பாஜக -6
இந்தியா -2
பி.ஆர்.எஸ். -8

ஒடிசா:
மொத்தம் – 21
பாஜக -8
இந்தியா -0
பிஜேடி -13

அசாம்:
மொத்தம் – 14
பாஜக – 12
இந்தியா -1

சத்தீஷ்கர்:
மொத்தம் -11
பாஜக – 7
இந்தியா -4

ஜார்க்கண்ட்:
மொத்தம் -14
பாஜக -13
இந்தியா -1

அரியானா:
மொத்தம் -10
பாஜக -8
இந்தியா -2

பஞ்சாப்:
மொத்தம் -13
பாஜக – 0
இந்தியா -13

டெல்லி:
மொத்தம் -7
பாஜக -5
இந்தியா -2

உத்தரகாண்ட்:
மொத்தம் -5
பாஜக – 5
இந்தியா -0

காஷ்மீர்-லடாக்:
மொத்தம் -6
பாஜக -3
இந்தியா -2

இமாச்சலப்பிரதேசம்:
மொத்தம் -4
பாஜக -3
இந்தியா -1

மணிப்பூர்:
மொத்தம் -2
பாஜக -0
இந்தியா -2

வட கிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 9 இடங்களும் பாஜக கூட்டணிக்கே கிடைக்கும்.

கோவா மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் பாஜக அணியே வெல்லும் என அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இது இறுதித் தீர்ப்பல்ல.

இன்னும் இருக்கிறது, எட்டு மாதங்கள்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment