பணமா? பாசமா? என்றால் பல பேரின் பதில் பணமாகத் தான் இருக்கின்றது. ஏனென்றால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பணம் பெரும்பங்கு வகிக்கிறது. அப்பேர்பட்ட பணத்தில் காந்தியைத் தவிர வேறு எதையாவது கவனித்திருப்போமா? மாட்டோம்.
ரூபாய் நோட்டுகளில் இந்தியாவையே பார்க்கலாம் என்றால் வியப்பாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. 2016 முதல் புதிய மகாத்மா காந்தி படம் போட்ட கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.
நாட்டின் கலாச்சரத்தையும், பண்பாட்டையும் உணர்த்தும் வகையில் இந்திய நினைவுச் சின்னங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 10 ரூபாய் நோட்டில் கோனார் சூரிய கிரகத்தின் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளன.
20 ரூபாய் நோட்டில் எல்லோரா குகை பொறிக்கப்பட்டிருக்கும். 50 ரூபாய் நோட்டில் ஹம்பி தேரும், 100 ரூபாய் நோட்டில் ராணி படிக்கல் கிணறு இருக்கும். 200 ரூபாய் நோட்டில் சாஞ்சி ஸ்தூபி, 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை, 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் சேட்லைட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.
10 ரூபாய் நோட்டில் கோனார் சூரிய கிரகத்தின் சக்கரம்:
ஒடிசாவில் சூரிய பகவானின் பெருமையை போற்றும் கோனார் கோயில், இந்தியாவின் மிக முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் கட்டிடக்கலையின் அற்புதமாகவும் திகழ்கிறது.
இதில் 12 ஜோடி கொண்ட 24 சக்கரம் செதுக்கப்பட்டிருக்கும். 12 என்பது வருடத்தின் 12 மாதத்தையும், 24 என்பது மணி நேரத்தையும் குறிக்கும்.
இது ஒரு காலத்தில் இது சூரியக் கடிகாரமாகப் பயன்படுத்தப்பட்டது.
பழைய 10 ரூபாய் தாளில் புலி, யானை என விலங்குகளின் படம் இடம் பெற்றிருந்தன. இது இந்தியாவில் விலங்குகளின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக அச்சிடப்பட்ட இருந்தது.
20 ரூபாய் நோட்டில் எல்லோரா குகை:
20 ரூபாய் நோட்டை திருப்பினால், மகாராஷ்டிராவில் உள்ள கைலாஷ் கோயிலின் தூண்களில் ஒன்றின் அழகிய படத்தைக் காண்பீர்கள். அதில் கிட்டத்தட்ட 100 குகைகள் உள்ளன.
இதில் எல்லோரா குகைகள் இடம்பெற்றிருக்கும்.
இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என அழைக்கப்படுகிறது.
இது மிகப்பெரிய சுற்றுல தளமாகவும் உள்ளது. அதில் நம்பமுடியாத கட்டடக்கலைப் படைப்பான கைலாஷ் கோயிலை நாம் காணலாம்.
பழைய 20 ரூபாய் தாளில் அந்தமான் பகுதியின் தீவு இடம் பெற்றிருக்கும்.
50 ரூபாய் நோட்டில் ஹம்பி:
விஜயநகர சாம்ராஜ்யத்தின் பழைய இடமான ஹம்பிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா?
புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அதை பார்க்கலாம்.
கர்நாடகா ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் வளாகத்தின் புகழ்பெற்ற கல் தேர் ஒன்று இடம்பெற்றிருக்கும்.
இது ஹம்பியின் அங்கீகரிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.
இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என அழைக்கப்படுகிறது.
இது மிகப்பெரிய சுற்றுல தளமாகவும் உள்ளது.
பழைய 50ரூபாய் தாளில் டெல்லி நாடாளுமன்றத்தின் நீதியை நிலைநாட்டும் விதமாக இப்படம் பொறிக்கப்பட்டிருந்தன.
100 ரூபாய் நோட்டில் ராணியின் படிக்கிணறு:
100 ரூபாய் நோட்டில் குஜராத்தின் படானில் அமைந்துள்ள ராணி கி வாவ் என்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் இடம்பெற்றுள்ளது.
இது ராணியின் படிக்கிணறு என்றும் அழைக்கப்படுகிறது.
நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த படிக்கட்டுக் கிணறு 11 ஆம் நூற்றாண்டின் மன்னர் பீம் தேவ் இன் நினைவாக கட்டப்பட்டது.
பழைய 100 ரூபாய் தாளில் மலைப் பிரதேசங்களை குறிக்கும் விதமாக இமயமலை அச்சிடப்பட்டிருக்கும்.
200 ரூபாய் நோட்டில் சாஞ்சி ஸ்தூபி:
சாஞ்சி ஸ்தூபி இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற புத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சி நகரில் அமைந்துள்ளது. 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்தூபி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது.
500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை:
2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட உடனேயே, பணத்தாள் புழக்கத்தின் ஒரு பகுதியாக 500 ரூபாய் மாறியது.
அதன் பின்புறத்தில் செங்கோட்டை இடம்பெற்றிருக்கும்.
டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டை, டெல்லியில் அதிகம் பார்வையிடப்படும் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.
பழைய 500 ரூபாய் தாளில் சுதந்திர காலத்தில் காந்தி தண்டி போராட்டத்திற்கு நடைபயணம் மேற்கொண்ட படம் அச்சிடப்படப்பட்டிருக்கும்.
2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான்:
இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையேயான விண்வெளிப் பயணத்தின் வெற்றியை குறிக்கும் விதமாக மங்கள்யான் சேட்லைட் அச்சிடப்பட்டிருக்கும்.
இந்த ரூபாய் தாளில் நம் நாட்டின் அடையாளம் சின்னங்கள், பெருமைகள் என அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக அச்சிடுடப்படுகின்றன.
– வைஷ்ணவி பாலு