ஆசியாவை மிரட்டும் பருவநிலை மாற்ற பாதிப்புகள்!

ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக வானிலை அமைப்பான world meteorological organization ஆசியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர்கள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி பருவநிலை மாற்றம் அதிவேகமாக நடைபெறும் கண்டமாக ஆசியா குறிப்பிடப்பட்டுள்ளது.

1991 – 2022 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றமானது 1961 – 1990 களில் ஏற்பட்ட மாற்றத்தை விட 2 மடங்கு அதிகம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை, பருவநிலை மற்றும் தண்ணீர் தொடர்பாக மொத்தம் 81 பேரிடர்கள் கடந்த ஆண்டில் மட்டும் ஏற்பட்டுள்ளன.

இவற்றில் 83 சதவீதம் வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்டவை. இதனால் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நீண்ட கால வறட்சியால் சீனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2022 இல் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான சூழலால் ஆசியாவில் உள்ள பனிப்பாறைகள் முன்பை விட அதிக வேகமாக உருகியுள்ளன. இது அடுத்து வரும் ஆண்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரிடர் தொடர்பான எச்சரிக்கை ஆசிய நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்குமான அலெர்ட் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

வறட்சி காரணமாக ஆசியாவின் பல பகுதிகளில் குறிப்பாக சீனாவில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தானில் சராசரியை விடவும் 40 சதவீதம் குறைவான மழையே பெய்திருக்கிறது.

இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம்.

வெள்ளம் காரணமாக கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 2002 – 2021 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை விட அதிகம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment