பிரமிக்க வைக்கும் உயிரினங்கள்!

வித்தியாசமான உயிரினங்கள் இந்த உலகில் அதிகம் உள்ளன. அவற்றில் பல நாம் அறிந்திராதவை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 

வைபர் ஃபிஷ் எனப்படும் விரியன் மீன் கடல் வாழ் மீன் இனங்களில் ஒன்று. வெப்பமண்டல கடல் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

இந்த மீன்களுக்கு போர்டோபோர்சு என்ற ஒளி உமிழ் உறுப்பு காணப்படுகிறது. இருள் சூழ்ந்த பகுதியில் இந்த ஒளிரும் உறுப்பின் துணையுடன் வெளிச்ச எல்லைக்குள் இறையைத் தேடிப் பசி அறிகிறது.

இந்த வகை மீன்கள் கருப்பு, பச்சை, வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.

இரவில் ஆழமான பகுதிக்கு செல்லக்கூடிய இவை பகலில் 80 மீட்டர் முதல் 1500 மீட்டர் ஆழத்திற்குள் வசிக்கின்றன.

கூறிய பற்கள் கொண்ட இவை அதிகபட்சம் 60 சென்டிமீட்டர் வரை வளரும்.

மூங்கில் லெமூர்

மடகாஸ்கர் தீவுகளில் அதிகமாக காணப்படும் மூங்கில் லெமூர் வித்தியாசமான விலங்குகளில் ஒன்று. குரங்கு மற்றும் தேவாங்கர்களின் கலவையாகக் காணப்படும் உயிரினம்.

மூங்கில் காடுகள் இருக்கும் இடங்களிலேயே அதிகம் காணப்படுவதாலும் மூங்கிலேயே உணவாக உட்கொள்வதாலும் மூங்கில் லெமூர் என பெயர் பெற்றுள்ளன.

26 முதல் 46 சென்டிமீட்டர் நீளமும் 2.5 கிலோ எடையும் கொண்டிருக்கும் இவை சாம்பல் பழுப்பு நிறத்தில் ரோமங்களை உடல் முழுவதும் கொண்டிருக்கும் மற்றும் வட்டமான காதுகளை உடையது.

இவற்றின் ஆயுள் காலம் 12 ஆண்டுகள் மற்றும் இரண்டு குட்டிகள் வரை ஈனும் இவற்றின் இனப்பெருக்க காலம் 135 முதல் 150 நாட்கள் ஆகும்.

பாப்லர் பறவைகள்

காட்டுச் சிலம்பன் (Jungle babbler) அல்லது பாப்லர் என்ற பறவையினம் இந்திய காடுகளில் காணப்படுகிறது. இந்தப் பறவை இனங்களின் சிறப்புகளில் ஒன்று எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்.

ஏழெட்டு பறவைகளாகத் திரியும் இதனால் இதனை ஆங்கிலத்தில் செவன் சிஸ்டர்ஸ் என்று அழைப்பதும் உண்டு. காடுகள் மற்றும் நகரங்களில் கூட தென்படும் இவை, எப்போதும் ஒலி எழுப்பிக்கொண்டவாறே இருக்கும்.

இவை 16.5 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.

கொண்டைக் குயில், அக்கக்கா குருவி போன்ற பறவைகள் தங்களின் முட்டைகளை, பாப்லர் பறவைகளின் கூடுகளில் இட்டுச் சென்றுவிடும்.

குஞ்சு பொறித்த பின்னர், தன்னுடைய குஞ்சுகள் அல்ல என்பதை உணராமல், அவற்றுக்கும் சேர்த்து பெற்றோர் பறவைகள் இரைத் தேடி எடுத்து வரும்.

ஒவ்வொரு முறையும், இரை தேடி இவைச் சோர்ந்து போகும் என்பதால், இதர பறவைகள் இந்தக் குஞ்சுகளுக்கு இரை கொண்டுவந்து கொடுக்கும்.

– சங்கீதா

Comments (0)
Add Comment