புகைப்படத்துறையின் சிங்கப்பெண் ராதிகா ராமசாமி!

இக்காலக்கட்டத்தில் அனைத்து துறையிலும் பெண்கள் கலந்து கொண்டு சாதனை செய்கின்றனர். புகைப்படத் துறையில் பெரும்பாலும் ஆண்களை மட்டுமே நாம் திருமணம், பிறந்தநாள் என அனைத்து இடத்திலும் பார்த்திருப்போம்.

இந்த காலத்தில் புகைப்படத்துறை இன்னும் அட்வான்ஸாக மாறிக் கொண்டிருக்கிறது. புகைப்படத் துறையில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உள்ளனர். புகைப்படத்துறையில் பல்வேறு வகைகள் உள்ளன.

அதில் ஒன்று ஒயில்ட் லைப் போட்டோகிராபி. ஒயில்ட் லைப் போட்டோகிராபி என்பது அனைத்து உபகரணங்களை தூக்கி சுமந்துக்கொண்டு காடு மேடு சுற்று திரிந்து ஆண்களே முழுநேரமாக ஒயில்ட் லைப் துறையில் இல்லாதபோது இத்துறையில் சாதித்த இந்தியாவின் முதல் பெண் வன விலங்கு புகைப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி.

ராதிகா ராமசாமி தேனி அருகே உள்ள வெங்கடாச்சலபுரம் என்ற ஊரில் பிறந்துள்ளார். இந்தியாவின் முன்னணி வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.  இந்தத் துறையில் 20 வருட அனுபவமுள்ளவர். இவர் பறவைகள் மீது ஆர்வமுள்ளவர் மற்றும் பறவை புகைப்படம் எடுப்பதில் நிபுணராக உள்ளார்.

எதிர்காலத்தில் தன்னைப் போலவே அனைத்து பெண்களும் புகைப்படத் துறையில் சாதிக்க  வேண்டும் என்ற ஆசையில் வன விலங்கு துறையில் மாஸ்டர் கிளாஸ் வகுப்பும் எடுத்துக் கொண்டு வருகின்றார். பொதுவாக ஒரு புகைப்படம் ஆயிரம்  கதை சொல்ல வேண்டும். அதனால் அவர் ஒவ்வொரு புகைப்படத்தை எடுப்பதற்கு முன் விலங்குகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து காத்திருந்து ஒவ்வொரு புகைப்படத்தை எடுக்கின்றார்.

2003 இல் பரத்பூர் இராஜஸ்தானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியக் களமான கேவலாதேவ் தேசியப் பூங்காவில் பறவைகளை முதன்முதலாக ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினார். ஒக்லா பறவைகள் சரணாலயத்திற்கு அடிக்கடி சென்று கவனிக்கத் தொடங்கி பின்னர் இந்தியாவில் இவரின் கால்தடம் பதியாத காடுகளே இல்லையாம். இந்தியா மட்டுமில்ல ஆப்ரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்குச் சென்று பறவைகளைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

2005 இல் தூய்மை கங்கைத் திட்டதிற்கு இவரது கானுயிர்ப் படங்கள் புது தில்லியிலுள்ள இந்திய சர்வதேச மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 2007 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆண்டு மலரில் இவரின் பறவை ஒளிப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. பேர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2008 ஆம் ஆண்டு சிறந்த 20 ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவராக இவரைத் தேர்வு செய்தனர். இவர் இந்திய ஒளிப்படக்கலைச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், நிக்கான் தொழிற்சேவை அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

வனவிலங்கு தொடர்பான ஒளிப்படக் கண்காட்சிகள், பயிற்சி வகுப்புகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் 2015 மார்ச் 20 இல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நடத்திய தேசிய ஒளிப்படக்கலை விருது விழாவின் நடுவராக இருந்தார். 2016 இல் இத்தாலியில் சியேனா அனைத்துலகப் பட விருது நிகழ்வின் நடுவராகவும் இருந்துள்ளார். பல சர்வதேச புகைப்பட விழாக்களில் பங்கெடுத்தும் நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீடுகள் :

  • 2010 இல் தனது முதல் படப் புத்தகமான “பேர்ட்ஸ் போட்டோகிராபி”யை வெளியிட்டார்.
  • 2014 இல் “தி பெஸ்ட் ஒயில்ட் லைப் மொமென்ட்” என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார்

விருதுகள் :

  • 2009 இல் முதல் பெண் வனவிலங்கு ஒளிப்படக்கலைஞர் என்று தூர்தர்ஷன் அங்கீகாரம் வழங்கியது.
  • பிப்ரவரி 2015, சென்னையின் புகழ்பெற்ற சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து ராதிகாவுக்கு “இன்ஸ்பைரிங் ஐகான் விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • ஜூன் 2015 வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் சிறந்த செயல்திறன் மற்றும் சாதனைகளுக்காக அவருக்கு ICF (The International Camera Fair) விருது வழங்கப்பட்டது.
  • பிப்ரவரி 2020, தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து ராதிகாவிற்கு “உமன் ஆஃப் எக்ஸலன்ஸ்” ,லென்ஸ் குயின் விருது வழங்கப்பட்டது .
  • பிப்ரவரி 2020, ராதிகாவுமன் ஆஃப் வொண்டர்-ரியலிஸ்டிக் விருதுகள் 2020 பெற்றார்
  • மார்ச் 2020, நினைவு நிறுவனக் குழுவிலிருந்து “பெண்கள் சாதனையாளர் 2K20” விருது.

வைஷ்ணவி பாலு

Comments (0)
Add Comment