ரஜினி, கமல் படங்களின் எடிட்டர் R.விட்டல் மறைவுக்கு அஞ்சலி!

தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் எடிட்டர் R. விட்டல், புதன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. மனைவி பெயர் கமலம். ஒரு வருடத்திற்கு முன்புதான் காலமானார். அவருக்கு ஒரே மகள் சுமதி.

ஏவிஎம் தயாரிப்பில் 40 படங்கள் எடிட்டராகப் பணியாற்றினார் விட்டல். SP. முத்துராமன் இயக்கத்தில் 71 படங்கள் எடிட்டராகப் பணியாற்றினார். சிவாஜி நடித்த 18 படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியுள்ளார்.

டைரக்டர் ராஜசேகர் இயக்கத்தில் 16 படங்கள், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 12 படங்கள் யோகானந்த் இயக்கத்தில் 10 படங்கள் C.H. நாராயண மூர்த்தி இயக்கத்தில் 3 படங்கள், பட்டாபிராமன் இயக்கத்தில் 7 படங்கள், ராஜா இயக்கத்தில் 6 படங்கள், சிவாஜி படங்கள் 13, கமலஹாசன் படங்கள் 10, ரஜினிகாந்த் 33 படங்கள், ஜெய்சங்கர் – 18 படங்கள் என எண்ணற்ற படங்களில் எடிட்டராகப் பணியாற்றி பெருமைக்குரியவர் விட்டல்.

தயாரித்த படங்கள்
1. முத்தான முத்தல்லவோ
2. பெண்ணைச் சொல்லி குற்றமில்லை
3. முடிசூடா மன்னன்

டைரக்ஷன் செய்த படங்கள்
1.வீட்டுக்கு வந்த மருமகள்
2.உன்னைத்தான் தம்பி
3. எங்களுக்கும் காதல் வரும்
4. தொட்டதெல்லாம் பொன்னாகும்
5.முத்தான முத்தல்லவோ

Comments (0)
Add Comment