மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு!

பிரம்மாண்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன்.

1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை தயாரித்தார்.

இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், ஜென்டில்மேன்-2 படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கே.டி.குஞ்சுமோன்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில்தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்தப் படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

எ.கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார்.

இந்தப் படத்தின் பாடல் இசை கோர்ப்பு பணி கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் ஒரு வார காலம் கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் நடந்தது.

இதற்காக கேரளாவுக்கு வருகை தந்த இசையமைப்பாளர் கீரவாணியை கவுரப்படுத்தும் விதமாக மிகப்பெரிய அளவில் வரவேற்பு விழா நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

கீரவாணியை மறக்க முடியாத வகையில் கவுரவப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அப்படி கீரவாணியை கவுரவிக்க தகுதியானவர், தனது நண்பரும், பிரபல பின்னணிப் பாடகருமான ஜெயச்சந்திரன்தான் அவரது நினைவுக்கு முதலில் வந்தார்.

போல்காட்டி பேலஸுக்கு வருகை தந்த ஜெயச்சந்திரனை கே.டி.குஞ்சுமோனும் கவிஞர் வைரமுத்துவும் வரவேற்றனர்.

இந்த சந்திப்பின்போது வைரமுத்துவும் ஜெயச்சந்திரனும் குஞ்சுமோனுடன் நீண்ட நேரம் தங்களது பழைய கால நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்தனர்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திற்காக வைரமுத்து எழுதிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தான் என சிலாகித்தார் ஜெயச்சந்திரன்.

போல்காட்டி பேலஸில் ஜென்டில்மேன்-2 பாடல் இசை கோர்ப்பு நிகழ்வில் பங்கேற்ற அந்த ஆறு நாட்களும் தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என கீரவாணி, வைரமுத்து இருவருமே மகிழ்ந்து போய் தெரிவித்தனர்.

தற்போது மூன்று பாடல்களின் கம்போஸிங் முடிந்துள்ள நிலையில், மற்ற பாடல்களின் கம்போசிங் விரைவில் நடைபெற இருக்கிறது.

Comments (0)
Add Comment