நெட்ஃபிலிக்சில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அஸ்வின்ஸ்’!

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம்.

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதேபோன்றதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் திரையிடப்பட்ட இந்த ஹாரர் திரில்லர் படம், பல நாடுகளில் முதல் 10 ரேங்கிங்கில் உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மூன்று மற்றும் நான்காம் இடத்திலும், மலேசியாவில் 7, சிங்கப்பூரில் 10 மற்றும் இலங்கையில் 5 என பல நாடுகளில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா, “நம் நாட்டிற்கு அப்பால், பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படமாக உருவாக்கித் தந்த ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி.

இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்குத் தூண்களாக இருந்த என் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.

நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் இதயங்களை வெல்வதில் தவறுவதில்லை.

மேலும், ’அஸ்வின்ஸ்’ அனைத்து இடங்களிலும் உள்ள பார்வையாளர்களின் அன்பையும் ஆதரவையும் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Comments (0)
Add Comment