கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!

– கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை.

இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அனுபவத்தை எழுதியுள்ளார் கல்வியாளர் உமா மகேஸ்வரி.

2004 இல் நிகழ்ந்த பள்ளி தீ விபத்தில் உயிர் நீத்த 94 குழந்தைகளின் நினைவாக அவர்கள் உயிர்நீத்த ஜூலை 16 அன்று கல்விக்கான உரிமைக்குரல் ஓங்கி எழுப்பப்பட்டது.

அந்தக் குழந்தைகளது படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பறை நிகழ்ச்சி, பாடல், பேச்சு என தொடர்ந்தது நிகழ்வு.

சிறப்பு அழைப்பாளர்களில் நானும் ஒருவர். மாநிலக் கல்விக்கொள்கை அவசியம் ஏன்? என்ற தலைப்பில் உரையாடினேன்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள எதுவுமே நம் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்பதை கள‌ எதார்த்தங்களைப் பற்றி அவர்களிடம் பேசி வந்தேன்.

பேராசிரியர் சிவக்குமார் உரையைக் கேட்கும்போது, கடந்த காலங்களில் கல்வித் தளத்தில் அவரது அளப்பரிய பங்கைப் புரிந்து கொள்ள முடிந்தது. உயர்கல்வி குறித்து பெரும்பான்மையான சிக்கல்கள்களை முன்வைத்தார்.

புதிய தேசியக் கல்விக்கொள்கையில் கல்வி பற்றியே பேசப்படாதபோது என்று ஆரம்பித்த பிரின்ஸ் கஜேந்திர பாபு எப்போதும்போல தனது கர்ஜிக்கும் குரலால் நீட், நெக்ஸ்ட் என்ற தேர்வுகளை என்ன மாதிரியான கோணத்தில் அணுகுவது என்பது உட்பட நீண்ட உரையை தந்து சென்றார்.

நிகழ்வின் ஆரம்பத்திலேயே விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றிய தோழர் நலங்கிள்ளி அவர்கள் ஆங்கிலம் பேசுவது கற்பிப்பது கற்றுக்கொள்வது என எதுவுமே சரியாக தராத கல்விமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

காலையில் தாம்பரத்தில் கிளம்பி ரயில் பயணம், கும்பகோணம் சென்று சேரும் வரை சோர்வின்றி நம்மோடு இன்றைய கல்வி முறை குறித்து உரையாடி வந்தது பெருமகிழ்ச்சி.

நிறைய தோழர்கள் நிகழ்வில் கலந்துகொள்வதுடன் என்னை சந்திப்பதற்காகவும்
தேடி வந்திருந்தது குறித்து எனக்கு ஒரு நம்பிக்கை ஓரத்தில் துளிர்விடுகிறது என்று உற்சாகம் பொங்க பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment