– டாக்டா். முத்துலட்சுமி ரெட்டி
“டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி அம்மா அவர்கள் சட்டசபையில் உபத் தலைவராக இருந்தபோது, தேவதாசி பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க முழுமூச்சுடன் பாடுபட்டார்.
அப்போது இதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. பழமையில் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒரு அங்கத்தினர் ‘தேவதாசி ஒழிப்புச் சட்டத்தினால் தேவாலயத் தொண்டுகள் தடைப்பட்டுவிடும். அதை எப்படி அனுமதிப்பது?’ என்று கேட்டபோது, “அப்படியானால் உங்கள் பெண்ணை அனுப்புவீர்களா?” என்று சீறினார்.
இன்னொருவர் “தேவதாசி முறையை ஒழித்தால், நாட்டியக்கலை என்னாவது?” என்று கேட்டார்.
“உங்கள் கலையைக் கொண்டு குப்பையில் போடுங்கள்” என்று கத்திவிட்டு பெரிதாக அழ ஆரம்பித்தார் அம்மா.
பெண்கள் அழுதும் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் அல்லவா? அம்மாவின் அழுகை, அவா் அவல நிலையில் உள்ள பெண்களிடம் கொண்டுள்ள அளவற்ற அன்பையும், இரக்கத்தையும் காட்டுகிறது.”
– 1966-ல் தினமணி கதிாில் எழுத்தாளா் வசுமதி ராமசாமி எழுதி வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி.