கண்ணாடி வழியாக கோபத்தை வெளிப்படுத்திய சிவாஜி!

படித்ததில் ரசித்தது:

* கண்ணாடி வழியாகக் கூட கோபத்தை காட்டலாம் என்று காட்டியவர் சிவாஜி.

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர்!

* ‘ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

Comments (0)
Add Comment