பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்!

– பிரதமர் மோடி உத்தரவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

*நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

*ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயராக உள்ளது.

* மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம்.

*மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது.

*இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் குற்றவாளிகள் தப்ப முடியாது.  

*யாராக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர்.

*பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

Comments (0)
Add Comment