பெரும் வரவேற்பைப் பெற்ற துருவ நட்சத்திரம் பாடல்!

கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள்.

‘சியான்’ விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு மனம்’ இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்றது.

தற்போது இரண்டாவது சிங்கிளான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ உடன் மீண்டும் வந்துள்ளது.

இந்த பெப்பியான பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.

திறமை மற்றும் துடிப்பான இண்டி ராப்பரும் பாடலாசிரியருமான பால் டப்பா, இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இதற்கு முன்பு வெளியாகி ஹிட்டான பாடலான ‘ஐ ஐ ஐ’லையும் அவர்தான் எழுதினார்.

இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், ரிதுவர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Comments (0)
Add Comment