வேக வைத்த முட்டையில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது?

சத்தான உணவுகளில் முட்டைக்கு முக்கியமான இடமுண்டு. முட்டையை தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என மருத்துவர்களே பரிந்துரைப்பாளர்கள். அப்படிப்பட்ட முட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்குக் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

1. புரோட்டீன் அதிகம் உள்ளது.

ஒரு வேக வைத்த முட்டையில் 6 கிராமிற்கு மேல் புரோட்டீன் உள்ளது. எனவே இதை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் புரோட்டீன் குறைபாடு நீக்கப்படுவதோடு, உடலும் வலிமையாகும்.

மேலும் புரோட்டீன் உடலில் உள்ள செல்களை சரிசெய்யும் பணியை செய்கின்றன. எனவே உடல் செல்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் முட்டையை சாப்பிட வேண்டும்.

2. கண்களுக்கு நன்மை பயக்கும்.

கண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டை மிகவும் நல்லது. தினமும் 2 முட்டையை உணவில் சேர்த்து வந்தால், கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கரோட்டினாய்டுகள் கிடைக்கும்.

இது கண்களின் செல்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும். இது தவிர, கண் புரை அபாயமும் குறையும்.

3.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் ஒரு வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால், உடல் வலிமையாக இருக்கும்.

முட்டையில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.             

4. எலும்புகள் வலுவாகும்.

முட்டைகளில் வைட்டமின் டி ஏராளமான அளவில் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த மிகவும் முக்கியமான சத்தாகும்.

முட்டையை தினமும் சாப்பிட்டால், அது சூரியக் கதிர்களிடம் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-யை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் எலும்புகளை வலுவடைந்து, எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயம் குறையும்.

5. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

முட்டையில் நிறைய கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் இது இதய ஆராக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. ஏனெனில் இது டயட்டரி கொலஸ்ட்ரால்.

இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. ஆகவே தான் இதயம் ஆரோக்கியமாக இருக்க முட்டையை தினமும் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

– நன்றி: அறிவை வளர்ப்போம் இணைய இதழ்.

Comments (0)
Add Comment