விஜயகாந்த் மகன் நடிக்கும் புது ஆக்சன் படம் துவக்கம்!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

“வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U.அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை பதிவு செய்யப்படவுள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம் தேதியன்று அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Comments (0)
Add Comment