– எழுத்தாளர் இந்திரன்
முகநூலில் எழுதினால் என் கவிதைகளைத் திருடி விடுவார்கள் என்கிற கவலை எனக்கு இல்லை. மற்றவர்களைத் திருடத் தூண்டும் கவிதை வரிகளை எழுத ஆசைப்படுகிறேன்.
அதற்காக இரவும் பகலுமாக உழைக்கிறேன் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் இந்திரன்.
“இன்றைய காப்பிரைட் சட்டங்கள் என்னைச் சலிப்படைய வைக்கின்றன. வாய்மொழியாகவே ராமாயணமும், மகாபாரதமும், திருக்குறளும், ஆத்திசூடியும் எல்லோருக்கும் சொந்தமாக வாழ்ந்து வந்த ஒரு நாட்டில் வாழ்கிறவன் என்ற வகையில் அறிவுப் பகிர்தலைப் பணத்தோடு தொடர்புபடுத்திய காப்பிரைட் சட்டங்கள் கல்விக்கு எதிரானவை என்று நான் கருதுகிறேன்.
எனது அறிவை எல்லோருடனும் பகிர்தலே எனது வாழ்க்கையின் லட்சியம் என்று நான் கருதுகிறேன்.
நான் இதுவரை ஏந்தி ஓடிவந்த தீப்பந்தத்தை இனி தொடர்ந்து ஓடப்போகிற இளைய சக்திகளிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருக்கிறது.
முகநூலில் என் நேரத்தை வீணடித்து விடுகிறேன் என்று எனக்கு அறிவுரை கூறும் என் நண்பர்களுக்கு இதையே என் பதிலாகக் கூற விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.