மாமன்னன் படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் லிங்குசாமி, எழில், சித்ரா லக்‌ஷ்மனன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று மாமன்னன் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்தினார்கள்.

ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். ஒரு சிறந்தப் படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள்.

வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம். இயக்குநர் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்மையாக மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார்.

மாரி செல்வராஜை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

அவரது பல படங்களை பார்த்து ரசித்திருப்போம். ஆனால் இந்தப் படம் பார்த்த பிறகு எனக்கு ஒரு பாதிப்பை மனதில் ஏற்படுத்தி விட்டது” என்றார்.

மாமன்னன் படக்குழு சார்பாக உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment