அமேசான் பிரைமில் வெளியானது ‘தண்டட்டி’!

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் ‘தண்டட்டி’.

படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.

‘தண்டட்டி’ படம் கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சனரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ‘தண்டட்டி’ படம் ஜூலை 14ம் தேதி அதாவது இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment