நூல் அறிமுகம்:
கோவை ஓவியர் ஜீவானந்தன் தமிழக, இந்திய அளவில் புகழ்பெற்ற 17 ஓவியர்களை நேர்காணல் கண்டு, அவற்றை ஆவநாழி மின்னிதழில் வெளியிட்டிருந்தார்.
தற்போது அவற்றைத் தொகுத்து ‘நீங்கள் ஓவியரானது எப்படி?’ என்ற ஓர் அழகிய நூலாக வெளியிட்டிருக்கிறார்.
கிராமம், சிறுநகரம், பெருநகரச் சூழல்களில் பிறந்து வளர்ந்து வந்த ஒருவரை எப்படி ஓவியம் ஆட்கொண்டது என்பது பற்றியும் அவர்களின் பல்வேறு விதமான பயணங்கள்; வந்தடைந்த இலக்கு பற்றியும் மிக அழகாகத் தொகுத்து இருக்கிறார்.
ஓவியர் மனோகர், சுந்தரம் முருகேசன் என ராய் கந்தழி வரை இடம்பெற்றுள்ள ஓவியர்கள் ஒவ்வொருவரின் அனுபவமும் வளர்ந்து வரும் ஓவியர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலில் இடம்பெறாத புகழ்பெற்ற ஓவியர்கள் அனைவரையும் எதிர்காலத்தில் நேர்காணல் கண்டு அடுத்தடுத்து நூலாக வெளியிடுவார் என நம்புவோம்.
நீங்கள் எப்படி ஓவியர் ஆனீர்கள்? : ஓவியர் ஜீவானந்தன்
தரு வெளியீடு,
பிளாட் எண்: 105,
முதல் தளம்,
ஆர் பிளாக்,
கோவைபுதூர்,
கோயம்புத்தூர் – 42
விலை ரூ. 140