எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஜவான்’!

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ப்ரிவ்யூ இன்று காலை 10:30 மணிக்கு வெளிவந்தது, இதன் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது.

ஷாருக்கானின் மெகா படமான ‘ஜவான்’ படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரிவ்யூ ஜூலை 10-ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த உற்சாகமான செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஷாருக்கான். இது ரசிகர்கள் மத்தியில் ‘ஜவான்’ படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ இடையேயான கூட்டணி அட்லீயின் படைப்பாற்றல் பார்வையும், ஷாருக்கானின் ஈடு இணையற்ற நட்சத்திரத்துடன் முதல் முதலாக இணைந்து பணியாற்றுவதாலும், ஷாருக்கானின் தோற்றத்தை காண்பதற்கான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

‘ஜவான்’ திரைப்படத்தை கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment