இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா, கடந்த பிப்ரவரி மாதம் பதவியில் இருந்து விலகினார்.
இந்தப் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு, அஜித் அகர்கரை நியமிக்க பரிந்துரைத்தது.
இவர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 191 ஒரு நாள் போட்டிகளிலும், நான்கு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஓய்வு பெற்ற அகா்கர் மும்பை அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும், தில்லி அணியின் உதவி பயிற்சியாளா் குழுவிலும் இருந்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபரில் தொடங்க உள்ள நிலையில் அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.