அவசியமானவற்றை கற்பது மிக முக்கியம்!

பல்சுவை முத்து :

உங்களுக்கென ஒரு எண்ணமிருக்கட்டும். அதனை உங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். அதைக் குறித்து கனவு காணுங்கள். எப்போதும் அதைக் குறித்து சிந்தனை செய்யுங்கள். அதனையே வாழ்வெனக் கொள்ளுங்கள்.

எண்ணற்ற புத்தகங்கள்; ஆனால் காலமோ குறைவு. அவசியமானவற்றை கற்பது மிகவும் முக்கியம். கற்க வேண்டும். அதன்படி நடக்க முயல வேண்டும்.

உங்களின் மனம், உடல், தசைகள், நரம்புகள் ஆகிய ஒவ்வொன்றிலும் அந்த எண்ணம் நிரம்பியிருக்கட்டும்.

பிறவற்றை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளுங்கள். இதுதான் வெற்றி பெறுவதற்குரிய வழி. இவ்வாறு தான் பெருமக்கள் உருவாகிறார்கள்.

  • விவேகானந்தர்.
Comments (0)
Add Comment