ஜூலை 13ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3!

சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஏற்கெனவே இரண்டு கலன்கள் நிலவில் ஆய்வு மேற்கொண்டன. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 விண்கலம் ஏற்கெனவே ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்துக்கு சென்றடைந்தது.

சந்திராயனை ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. திட்டமிட்டபடி இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிபெறும் பட்சத்தில் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment