திரையில் வில்லன், நிஜத்தில் நாயகன்!

பெண்கள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து பிறந்தவீட்டை முற்றிலுமாக மறந்து புகுந்தவீட்டு பெருமையையே அதிகம் பேசுவர். இது உலக வழக்கம் இயல்பு.

ஆனால் ஒரு சில பெண்கள் தாங்கள் இறக்கும் வரை பிறந்த வீட்டின் மீதான பாசத்தை குறைத்து கொள்ளாமல் அதே சமயம் புகுந்த வீட்டிலும் நல்ல பெயர் எடுப்பர் . இதுபோன்ற அபூர்வமான ஒருவர்தான் வில்லன் நடிகர் ஆர் எஸ் மனோகர்.

இவர் ராசிபுரம் சுப்பிரமணிய அய்யர் மனோகர் என்ற பெயரை திரைக்காக சுருக்கி ஆர் எஸ் மனோகர் என்று வைத்துக்கொண்டார்.

இவர் 1925இல் இவர் பிறந்த இடம் நாமக்கல். பட்டதாரி. அதனால் அன்று அஞ்சல் துறையில் பணியாற்றிகொண்டு இருந்தார்.

ல்லூரி காலங்களில் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றுவது இவருக்கு பிடித்தமான ஒன்று.

அது பணியில் அமர்ந்த பின்னும் தொடர, மனோகரா என்ற பெயர் மனோகரா நாடகத்தில் நடிப்பதன் மூலம் இவருடன் ஒட்டி கொள்கிறது.

ராஜாம்பாள் என்ற படத்தில் நடிக்க 1951ம்வருடம் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் .

பிறகு நெகடிவ் ஹீரோ வேடங்கள் அதிகம் கிடைக்கிறது. இதற்கு காரணம் இவருடைய கனமான குரல், மிரட்டும் தொனியில் இவரின் உச்சரிப்பு எல்லாம் சேர்ந்து அப்படிப்பட்ட ஒரு இமேஜை தருகிறது.

எம்ஜிஆர் படங்கள் இவருக்கு ஒரு பெரிய ஊக்கத்தை தருகிறது. ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க, அடிமைப்பெண், காவல்காரன், இதயக்கனி ஆகியபடங்களில் முக்கிய வில்லன்.

சரி ஏதோ முதல் பத்தியில் பெண்களோடு ஒப்பிட்டீர்களே அது என்ன என்பதுதானே உங்கள் கேள்வி? காரணம் இருக்கிறது.

இவர் சினிமாவில் புகுந்து இருநூறு படங்களுக்கு மேல் நடித்தாலும் கூட தனது பிறந்தவீட்டை மறக்காது இறுதிவரை பல பிரமாண்டமான நாடகங்களை நடத்தினார்.

இவரது நாடகங்களில் புராண கதையில் வில்லனாக வருபவர்கள்தான் இதில் நாயகர்கள் இலங்கேஸ்வரன், நரகாசூரர், சூரபத்மன் சுக்காரச்ச்சரியார், பரசுராமன், சிசுபாலன், திருநாவுக்கரசர் போன்ற நாடகங்கள் பிரமாண்டமாக செட் போட்டு நடக்கும்.

அன்றைய காலகட்டத்தில் மிக நீண்டகாலம் நாடகங்கள், நடத்தியும் பெரிய நாடக குழு நடத்தியதும் நவாப் ராஜமாணிக்கம் என்பவர்தான் அவருக்கு பிறகு இவர்தான் அதிக நாடகங்கள் மேடைஏற்றியுள்ளார். மொத்தம் முப்பத்து ஒரு நாடகங்கள் 7,950 முறை மேடைஎற்றபடுள்ளதாக தெரிகிறது.

அப்போது எல்லாம் நாடகம் என்றால் அமெச்சூர் நாடக குழு ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலம்.

விசு,மௌலி, கிரேசி மோகன் , எஸ் வி சேகர் , ஓய் ஜி மகேந்திரன் போன்றவர்கள் நாடகம் போடும் காலம் முழுக்க முழுக்க நகைச்சுவை நாடகம். ( அப்போதுதான் நாடகத்திற்கு மக்கள் வருவர் என்ற நிலை )

ஆனால், அந்த நிலையிலும் இவரது புராண நாடகங்கள் இவரது பிரமாண்டத்திற்காக போட்டியில் முன்னணி வகிக்கும் மேடையிலேயே சண்டைக்காட்சிகளில் அம்புகள் பறப்பது, மலைகளை தோன்ற செய்வது,

பாற்கடல் கொந்தளிப்பது பறவைகள் பறந்து வருவது போன்ற கற்பனைக்கு கடினமான பல காட்சிகளை வெகு இயல்பாக செய்து இருப்பார்.

அதுமட்டுமல்ல சினிமாஸ்கோப் என்பது பிரமாண்ட திரையை குறிக்கும் அதுபோல டிராமாஸ்கோப் என்பது பெரிய மேடை அதை அமைத்தும், ஸ்டிரியோ போன் மைக் என பல புதுமைகள் செய்தார்

அதில் எல்லாம் உச்சம் இரண்டு மேடைகள் அடுத்த அடுத்த காட்சி இடைவெளி இல்லாமல் தொடர்வது போல சுழலும் மேடை எல்லாம் அமைத்து செயல்பட்டார்.
இந்த புதுமைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. நாடகத்திற்கு திரளாக கூட்டம் வந்தது.

இவர் காலத்திற்கு பின்பு மேடை நாடகம் அதுவும் குறிப்பாக புராண நாடகம் முற்றிலும் ஒழிந்து விட்டது வருத்தத்திற்குரியது.

இவர் தோற்றம் பயமுறுத்தலாக இருந்தாலும் உண்மையில் மிக மென்மையானவர்.  மிகச்சாதாரண வாழ்க்கை வாழ்ந்து மறைந்த இந்த தம்பதியதருக்கு வாரிசுகள் எதுவும் இல்லை.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment