அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை!

வள்ளலார் கூறிய வாழ்க்கை நெறிமுறைகள்:
*

* நல்லவர்கள் மனதை நடுங்க வைக்கக் கூடாது.
* சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.
* ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது.
* அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.
உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.
* தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.
* யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.
* நல்ல நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது. நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது.
* எனக்கு சித்திகள் எல்லாம் தருகின்ற தெய்வமாக விளங்குவது சத்தியமே.
* பசியால் வாடுவதைக் கண்டும் காணாமல் போவதும் குருவை வணங்காமல் இருப்பதும் கூடாது.
* எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து, சம உரிமை வழங்குவோரின் மனதில்தான் இறைவன் வாழ்கிறான்.
* தீய செயல்களால் ஒற்றுமையான குடும்பத்தைப் பிரிப்பதும், தந்தை, தாய் சொல்லை மீறி நடப்பதும் கூடாது.
* ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு ஈவதே ஜீவகாருண்யம்.
* தவநெறியில் வாழ்வோரை ஏளனமாகப் பேசக்கூடாது.
* வாக்கு வேறு, மனம் வேறு, செயல் வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

Comments (0)
Add Comment