பல்சுவை முத்து
‘ஜென் குருமார்களில் மிகச் சிலரே பெண்கள். அவர்களில் ஒருவர் ரெங்கட்சு. ஒருநாள் இரவுவேளையில் வெளியே சென்ற அவர், அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். நள்ளிரவானதால் அதே கிராமத்தில் இரவு தங்கிவிட்டு, காலையில் செல்ல நினைத்தார்.
அந்த ஊர்க்காரர்களுக்கு ‘ஜென்’ என்றாலே பிடிக்காது. ஜென் வழி வருபவர்கள் எல்லாம் கலகக்காரர்கள், புரட்சிக்காரர்கள் என்று நினைத்தார்கள்.
ஜென்னை ஆதரித்தால், தங்களின் பழமையான சிந்தனைகளுக்கு பாதிப்பு வரும் என்று எண்ணினார்கள்.
அதனால் தான் அந்த ரெங்கட்சு ‘ஜென்’ குரு எனத் தெரிந்ததும், கதவுகளை மூடிக் கொண்டார்கள்.
வேறுவழியின்றி வெட்டவெளியில், நடுங்கும் குளிரில் படுத்துக்கொண்டார் அந்த ஜென் துறவி. அப்போது வானத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு வானில் மிதந்து கொண்டிருந்த நிலவு, காட்டு விலங்குகளின் ஓசை, செர்ரி பூக்கள் உதிர்வது என இயற்கையான நிகழ்வுகளை உணரத் தொடங்கினார்.
அப்போது தான் அந்தத் துறவி எண்ணிப் பார்த்தார், ‘அந்த அம்மையார் விரட்டாமலிருந்தால், இந்தக் காட்சியைக் கண்டிருக்க முடியாதே’ என்று.
எதையும் சமமாக ஏற்றுக்கொள்வது, எதிலும் இனிமையும், நன்மையும் காணும் மனப்பக்குவம்தான் ஜென்முறை.