இப்படியும் சில எதிர்வினைகள் இருக்குமா?
அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி.யான கனிமொழி தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பயணம் ஏகத்திற்குப் புகைப்படத்துடன் வைரலானது.
அப்படிப் பயணம் செய்தபோது, அவரிடம் பேருந்து நடத்துநர் டிக்கெட் கேட்டதை ஒட்டி அங்கு வாக்குவாதம் உருவாகி, பேருந்தை ஓட்டிய பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு வேலை பறிபோனது.
உடனே அவர் தொரைக்காட்சி சேனல்களுக்குப் பேட்டி அளிக்க- அதுவும் வைரல் ஆனது.
அதையடுத்து மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன் வேலை பறிபோன பெண் டிரைவரான ஷர்மிளாவைச் சென்னை வரவழைத்து அவருக்கு ஒரு காரைப் பரிசளித்திருக்கிறார்.
கமலின் ரீயாக்சன் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
முகநூலில் வழக்கம் போல ‘பிக் பாஸின்’ இந்தச் செயலைப் பாராட்டியிருக்கிறார்கள்.