பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்.
பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்கள்.
இசையில் மேதைமையுடன் இருந்தாலும், இசையைத் தவிர எம்.எஸ்.விக்கு ஒன்றும் தெரியாத குழந்தை என்பார் கவிஞர்.
ஒருமுறை கவிஞருடன் காரில் போய்க் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பொறியியல் கல்லூரியின் போர்டைப் பார்த்த எம்.எஸ்.வி., கவிஞரிடம் கேட்டிருக்கிறார்,
“அண்ணே… பொறியல் செய்யக் கூடத் தனியா கல்லூரி இருக்காண்ணே”