ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் காதம்பரி, பேபி, மாளவிகாமனோஜ், அரவிந்த்சாமி உட்பட பலர் நடிக்கும் படம் ‘நாயாடி’.
இதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டபோது, அவர் கூறியது;
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுனராக பணிபுரிந்தேன். இந்தப் படத்தில் தயாரித்து, இயக்கியதோடு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன்.
கேரளாவில் உள்ள பழங்குடி இனமான நாயாடி பின்னணியில், இந்த கதையை திகில், திரில்லர் கலந்து சொல்லியிருக்கிறோம்.
காடு, அமானுஷ்யம், பில்லி, சூனியம், கூடு விட்டு கூடு பாய்தல் போன்ற பல விஷயங்கள் கதையில் இடம் பெறுகின்றன.
ஒரு தம்பதி, தங்களின் மந்திர சக்தி மூலமாக ஒரு உடல் விட்டு இன்னொரு ஊடலுக்கு சென்று ஆயிரம் ஆண்டுகள் வாழ்கிறார்கள்.
அவர்கள் மேலும் சில ஆண்டுகள் வாழ, சிலரை நயவஞ்சமாக தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள். அவர்கள் நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் கதை. கிளைமாக்ஸ் உட்பட பல சீன்கள் புதுமையாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.