கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ!

ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதச் சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்-ஐஸ்லாந்து அணிகள் மோதின.

இதில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடினார்.

அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் 200 சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்தார்.  

ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்தில் உள்ளார். 

Comments (0)
Add Comment