குடும்பப் பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சினிமா மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நேர்மறையான பேச்சை உருவாக்கியுள்ளது.
திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ்.சினிஷ் (‘பலூன்’ பட இயக்குநர்) பேஷன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார். முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.