இப்படி ஒரு வாய்ப்பு எல்லா தந்தைக்கும் வாய்க்காது!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.வெங்கடேஷ். 1990 – 2006 வரையில் ராணுவத்தில் பணியாற்றிய வெங்கடேஷ், பின் கர்நாடக காவல்துறையில் இணைந்து, மாண்டியா சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக உள்ளார்.

இவரின் மகள், பொருளியல் பட்டதாரியான வர்ஷா. அவர் தன் தந்தையின் பாதையில் பயணிக்க முடிவெடுத்து, 2022-ல் கர்நாடக போலீஸ் எஸ்.ஐக்கான தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சியில் இருந்தார்.

பயிற்சி முடித்த வர்ஷா அதிர்ஷ்டவசமாக, தந்தை பணியாற்றிய அதே சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதே நேரம், அவரின் தந்தை வெங்கடேஷ் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.ஐயாக பொறுப்பேற்ற தன் மகளிடம், வெங்கடேஷ் தனது பொறுப்புகளை ஒப்படைத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து எஸ்.ஐ வர்ஷா நிருபர்களிடம், “என் வாழ்க்கையில் அப்பா தான் என் ரோல் மாடல். அவரைப் போலவே பணியாற்றி, பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்க என்னால் முடிந்ததைச் செய்வேன்’’ என்றார்.

நிருபர்களிடம் பேசிய எஸ்.ஐ வெங்கடேஷ், “என் மகள் தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் இந்த உயரத்தை தொட்டு, என்னை பெருமைப்படுத்தியுள்ளார்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

நன்றி: ஆனந்த விகடன்

Comments (0)
Add Comment