வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னை!

இங்கிலாந்தைச் சேர்ந்த எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது.

அதனடிப்படையில் அந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்தியாவிலிருந்து ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி, மும்பை நகரங்கள் 60வது இடத்தைப் பிடித்துள்ளன.

அதற்கடுத்த இடங்களை சென்னை, பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் பிடித்தன.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னா முதலிடத்தையும், டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி முறையே 3 மற்றும் 4 ஆவது இடங்களையும் பிடித்துள்ளன.

போர் நடந்து வரும் உக்ரைனின் கிவ் நகரம் 165-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment