வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகசப் பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான படைப்பு.
இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்திய சினிமாவில் முறையாக வீட்டுச் செல்லப்பிராணிகள், தங்கள் உலகிற்குள் மனிதர்களை அழைத்துச் செல்லும் அற்புதமான நிகழ்வாகும்.
KRG Studios நிறுவனர் கார்த்திக் கவுடா, “புதுமையான கதைசொல்லல் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். இப்படத்திற்காகப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் கைகோர்த்துள்ளேன்.
அவர் தெலுங்கிலும் அனில் ததானி இந்தியிலும் படத்தை விநியோகம் செய்யவுள்ளார்கள். உலகம் முழுதும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் திரைப்படத்தை விஜய் பாபு வழங்குகிறார். அறிமுக இயக்குநர் தேவன் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 14-ம் தேதி மலையாளத்திலும், ஒரு வாரம் கழித்து உலகம் முழுவதும் வெளியாகிறது.