எதிர் விமர்சனத்தால் ‘ஆதிபுருஷ்’ வசூல் சரிவு!

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துவருகிறது.

வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ , ‘சாஹோ’, ‘ஆதி புருஷ்’ ஆகிய மூன்று படங்களும், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இதன் மூலம் நடிகர் பிரபாஸ் புதிய சாதனையை நிகழ்த்தி பான் இந்திய வசூல் நட்சத்திரமாக உயர்ந்து பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

தற்போது, ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகிவரும் ‘சலார்’ படத்திலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகிவரும் ‘புராஜெக்ட் கே’ படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இதனிடையே மூன்று நாட்களில் ரூ. 300 கோடி வசூல் செய்திருந்த இப்படம் எதிர்  விமர்சனத்தால் நான்காவது நாளில் வெறும் ரூ. 30 கோடியும், அதற்கடுத்த நாளில் 16 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments (0)
Add Comment