ஜூன் – 20 உலக அகதிகள் தினம்:
ஐ.நா. சபையால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் உலக அகதிகள் தினம் ஜூன் 20-ம் தேதி ஒருங்கிணைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள அகதிகளை கொண்டாடவும், அவர்களை மரியாதை செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.
2001-ம் ஆண்டு ஜீன் 20-ம் தேதி இந்த தினம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1951ம் ஆண்டு நடத்தப்பட்ட அகதிகளின் நிலை குறித்த மாநாட்டின் பொன் விழா ஆண்டை அங்கீகரிக்கும் விதமாக இந்தநாள் உருவாக்கப்பட்டது.
தங்கள் நாட்டின் போர் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வரும் அகதிகளின் பலத்தை அங்கீகரிப்பதே இந்த நாளின் நோக்கம்.
அவர்களின் வாழ்க்கை மற்றும் அகதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடகம், பாடல், ஆடல் மற்றும் இசை நிகழ்ச்சிகளை அகதிகள் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளிகள், உள்ளூர் நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
உலக அதிககள் தினம் உலக அகதிகள் வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. தஞ்சம் தேடுவோர் மற்றும் அகதிகளை நாம் பார்க்க வேண்டும், அவர்களின் குரல்களை கேட்கவேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
போர், வன்முறை, துன்புறுத்தலால் பாதிப்பட்டு தங்கள் நாடுகளை, உடமைகளைவிட்டு ஏதுமின்றி தஞ்சம் தேடி வருபவர்கள். சர்வதேச எல்லைகளை கடந்து அடுத்த நாட்டினரிடம் தஞ்சம் கேட்கவேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் அகதிகள் கையில் கிடைத்த ஓரிரு துணிகள் மற்றும் உடமைகளுடனும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் பல்வேறு நாடுகளை தேடி ஓடுகிறார்கள்.
ஒவ்வொரு நிமிடத்திலும் 20 பேர் அகதிகளாக்கப்படுகிறார்கள். போர், வன்முறை, அவர்கள் தீவிரவாத்தில் இருந்து தப்பிப்பிழைக்க வேண்டியுள்ளது. இவர்கள் வழுக்கட்டாயமாக தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
அகதிகள் ஒரு நாட்டில் இருந்து தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு போரில் இருந்து தப்பியோடி வருபவர்களாக கருதப்படுகிறார்கள்.
தஞ்சம் வேண்டுவோரும் தாங்களும் அகதிகள் என்று அழைக்கப்படவேண்டும் என்றே கூறுகிறார்கள். உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள்.
நாடில்லாதவர்கள், எந்த நாட்டையும் சேராதவர்கள், அவர்களுக்கு எந்த தேசத்தின் அங்கீகாரமும் கிடையாது. திரும்பியவர்கள், புலம்பெயர்ந்தவர்களாக இருந்து நாடு திரும்பியவர்கள், அவர்கள் தங்கள் வாழ்வை கட்டமைக்க அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது.
இதுபோன்ற அகதிகளுக்கு வேலை உரிமை, கல்விபெறும் உரிமை, உறைவிட உரிமை, எந்த மதத்தையும் தழுவும் உரிமை, நீதிமன்றத்தை நாடும் உரிமை, அவர்களின் பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை அவர்கள் பெறுகிறார்கள்.
அவர்களின் பாதுகாப்பு என்பது அனைத்து அகதிகளுக்கு பொருந்தும் ஒன்று.
மற்ற உரிமைகளும் அவருக்கு நீண்ட நாட்கள் ஒரு நாட்டில் தொடர்ந்து தங்கும் பட்சத்தில் வழங்கப்படவேண்டும் என்று ஐ.நா. கூறுகிறது.
இந்தாண்டு அகதிகள் தினத்தின் கருப்பொருள் வீட்டை விட்டு விலகி வந்தாலும் நம்பிக்கை என்பதாகும்.
நம் சொந்த நாட்டில் நாம் வசித்து வரும் சொந்த இடத்தைவிட்டு வெளியேறி பணி நிமித்தம் மற்ற இடங்களில் சென்று தங்குவதற்கே துன்பப்படும் நாம், அவர்கள் உடமை, உடை என அனைத்தையும் இழந்து திக்குத்தெரியாமல் தங்களுடன் தொடர்பில் இல்லாத ஒரு மொழி, உணவு, நாகரீகம், கலாச்சாரம் உள்ள ஒரு தேசத்தில் அனைவரும் மனிதர்கள் என்ற நம்பிக்கையில் காலூன்றுகிறார்கள். அவர்களை அரவணைப்பதை இந்த நாளின் உறுதியாக ஏற்போம்.
நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்