சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் பெண்களுக்கு இலவச ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2019 ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள், கணவன் இல்லாத பெண்களின் முன்னேற்றத்திற்காக ’பிங்க் ஆட்டோ’ என்ற திட்டத்தை சென்னை ரோட்டரி கிளப் தொடங்கியது.
இதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டுவருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக திட்டத்தை தொடரமுடியாத நிலையில், தற்போது மீண்டும் திட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு வழங்கப்படும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் இந்த ஆண்டு நடைபெற்றது.
சென்னை அம்பத்தூரில் உள்ள ரோட்டரி மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதுவரை இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 88 ஆட்டோக்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கணவர் இல்லாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சென்னை ரோட்டரின் பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.