தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.
குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்த புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவரான சுல்தான் அல்நெயாடி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயல் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் பிபர்ஜாய் புயல் குஜராத் கரையைத் தொட்டபோது கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளதை அந்த படங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு செயற்கைக் கோள் மூலமாக புயல் எந்த திசையில் நகர்கிறது அதன் வேகம் என்ன போன்ற விவரங்களையும் அவர் உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைத்தார்.
தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.