சங்கர் – கணேஷ் இசையில் 100 பாடல்கள்!

கவிஞர் மகுடேசுவரனின் தொகுப்பு

“நாம் திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து தோய்கிறோம் என்றுதான் பெயரே தவிர, இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களை அண்மைக் காலங்களில் எவ்வாறு தொகுத்துப் பகுத்து வைத்திருக்கிறோம்? நல்ல விடையில்லை என்றே தோன்றுகிறது.

திரைப்படங்கள் பிற்காலத்தில் அவற்றின் பாடல்களாகத்தான் நம் நினைவில் நிற்கின்றன.

ஆனால், அப்பாடல்களின் திரட்டு பல இசைஞர்களுக்குச் செய்யப்படவில்லை” என்ற கவலையுடன் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசையில் உருவான 100 பாடல்களைத் தொகுத்து தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் கவிஞர் மகுடேசுவரன்.

நண்பரின் வேண்டுகோளுக்கேற்ப சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்களைத் தொகுக்க அமர்ந்தபோது இவ்வுண்மையின் சூடு உறைத்தது.

என்னதான் காலத்தின் இன்னொரு புறத்தில் இசையமைத்தவராக இருக்கட்டுமே, அவர்க்கொரு திரட்டல் இருந்திருக்கவேண்டாவா? அவரை அறிய ஒரு திறப்பு. அவரைப் பழைய நினைவில் நாடுவோர்க்கும் புதிதாய் அறிய முனைவோர்க்கும் தலைவாயிலாகும் தொகுப்பு.

ஏறத்தாழ பத்துமணி நேர உழைப்பின் பின்னர் இந்தத் தொகுப்பினை வெளியிடுகிறேன். சங்கர் கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த தலைசிறந்த நூறு பாடல்களின் தொகுப்பு.

இதனை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், நான் செய்யும்படியான வாய்ப்பு அமைந்தது.

தமிழ்த் திரையுலகம் நம் குமுகாயத்தின் பல நினைவுகளில் ஆழ்ந்து பதிந்திருக்கிறது. அவற்றின் பாடல்களுக்கு இன்னும் சிறப்பான இடம் உண்டு.

விசுவநாதனோடும் இளையராஜாவோடும் போட்டியிட்ட படங்களின் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இரட்டையர்.

முப்பத்தைந்து அகவைக்கு அருகிலானவர்கள் யார்க்கும் இவர்களுடைய பாடல்கள் அக்காலத்தின் நறுமணத்தை எழுப்பச் செய்வனவாக இருக்கும்.

மூத்தவர்கள் பலர் இந்தப் பட்டியலிலுள்ள பத்துப் பாடல்களையேனும் முப்பதாண்டுகட்குப் பின்னர் கேட்க நேரலாம். அதுவே சிலிர்ப்பூட்டும் நெகிழ்வு.

ஒரு பல்லவியைப் பிடிப்பதில் இவர்கள் திறமையானவர்களாக இருக்கிறார்கள். பல்லவியின் இரண்டாம் அடுக்கில் பேரெழுச்சியை உருவாக்குகிறார்கள்.

இவர்களுடைய மெல்லிசைப் பாடல்கள் வேறு தரத்தில் இருக்கின்றன.

குத்துப் பாடல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டா.

எழுபது எண்பதுகளின் ஒலிபெருக்கிப் பாடல்கள் பலவும் சங்கர் கணேஷ் இசைத்தவை என்பது புலனாகிறது.

பத்து மணி நேர உழைப்பைச் செலுத்தி எழுதப்பட்ட இந்தப் பாடற்பட்டியல் தமிழ்த் திரையிசை நேயர்களுக்கு என் பணிவான காணிக்கை.

இப்பட்டியலைப் பயன்படுத்தி காணொளி, ஒலிச் செயலிகளில் பாடற்கோவையை உருவாக்கி உலகோர்க்கு வழங்குங்கள்.

சங்கர் கணேஷ் இசையமைத்த தலைசிறந்த பாடல்கள் ஒரு நூறு :

1. நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் – நான் ஏன் பிறந்தேன்
2. எனது விழியில் உனது பார்வை உலகைக் காண்பது – நான் ஏன் பிறந்தேன்
3. பொன்னந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு – இதயவீணை
4. உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் – பட்டிக்காட்டு இராஜா
5. பருத்தி எடுக்கையிலே என்னைப் பலநாளாப் பார்த்த மச்சான் – ஆட்டுக்கார அலமேலு
6. பூங்குயிலே பூங்குயிலே நான் எத்தனை நாளாக ஏங்கி நின்னேன் – சின்ன சின்ன வீடு கட்டி
7. நாக்குல மூக்குல நத்துப்புல்லாக்குல பேச்சுப் பராக்குல – சின்ன சின்ன வீடு கட்டி
8. வடிவேலன் மனசு வெச்சான் மலர வெச்சான் – தாயில்லாமல் நானில்லை
9. தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது – வெள்ளிக்கிழமை விரதம்
10. தங்கத் தேரோடும் அழகினிலே இந்த இராஜாத்தி கொலுவிருந்தாள் – இரகுபதி இராகவ இராஜாராம்
11. பூவினும் மெல்லிய பூங்கொடி பொன்னிறம் காட்டும் பைங்கிளி – கண்ணன் வருவான்
12. நான் ஒரு கோவில் நீயொரு தெய்வம் உன்னைத் தேடி நான் வந்தேன் – நெல்லிக்கனி
13. நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு – தாய்மீது சத்தியம்
14. செப்புக் குடம் தூக்கிப் போற செல்லம்மா – ஒத்தையடிப் பாதையிலே.
15. உன் எண்ணம்தான் என் நெஞ்சில விதை போட மரமானது – ஒத்தையடிப் பாதையிலே.
16. பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம் – பனிமலர்
17. எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையி இராகம் – கண்ணோடு கண்
18. அலையலையாக அழகழகாக நீர்பாயும் ஓடைக்கரையில் – கண்ணோடு கண்
19. நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா – நீயா
20. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா – நீயா
21. மூக்குத்தி தொங்கலிலே முன்னே ஒரு பச்சக்கல்லு – புதிய தோரணங்கள்
22. ஓடைக்கரை மண்ணெடுத்து உன்னுருவம் செஞ்சி வச்சேன் – புதிய தோரணங்கள்
23. ஏ மாமா பொண்ணு ரோசாப்பூவே வாம்மா கண்ணு – எதிர் வீட்டு ஜன்னல்
24. அடி அம்மாடி சின்ன பொண்ணு ஆசைப்பட்டா நெஞ்சுக்குள்ளே – கன்னிப் பருவத்திலே
25. பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் – கன்னிப் பருவத்திலே
26. நடையை மாத்து அத்தான் நீ என்னைப் பார்த்து ஆடுறியே கூத்து – கன்னிப் பருவத்திலே
27. ஒரு தைம்மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாகச் சேர்த்து – வண்டிச் சக்கரம்
28. தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேரும் – வண்டிச் சக்கரம்
29. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது – நெஞ்சமெல்லாம் நீயே
30. மேகமே மேகமே பால் நிலா தேயுதே – பாலைவனச் சோலை
31. பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல்போலே முன்னால் போனாள் – பாலைவனச்சோலை
32. மதுக்கடலோ மரகதரதமோ மதன்விடும் கணையோ மழைமுகில் விழியோ – குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
33. அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை – நட்சத்திரம்
34. பார்வையோ உன்னிடம் போகுமோ வேறிடம் – நிஜங்கள் நிலைக்கின்றன.
35. முத்துரதமோ முல்லைச் சரமோ மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ – பொன்னகரம்
36. என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் – அஞ்சாத நெஞ்சங்கள்
37. வசந்தமும் நீயே மலர்களும் நீயே – கண்ணீர்ப் பூக்கள்
38. தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் – மூன்று முகம்
39. தனிமையிலே ஒரு இராகம் ஒரு தாளம் உருவாகும் – சட்டம் ஒரு இருட்டறை
40. இரண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும் – சிவப்பு மல்லி
41. எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் – சிவப்பு மல்லி
42. கொஞ்சம் ஒதுங்கு நான் தனியாப் பேசணும் உன்னோட – வசந்த காலம்.
43. ஓ நெஞ்சே நீதான் பாடுங்கள் ஏனின்று நீர்மேல் ஆடும் தீபங்கள் – டார்லிங் டார்லிங் டார்லிங்
44. அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே – டார்லிங்க் டார்லிங் டார்லிங்
45. சித்திரமே உன் விழிகள் கொத்துமலர்க் கணைகள் – நெஞ்சிலே துணிவிருந்தால்
46. நான் சின்ன ராணி சிவத்த மேனி – அதிசயப் பிறவிகள்
47. ஏ புள்ளே ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே – அதிசயப் பிறவிகள்
48. மலரே என்னென்ன கோலம் எதனால் என்மீது கோபம் – ஆட்டோ இராஜா
49. கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் இரண்டும் ஊதாப்பூ – ஆட்டோ இராஜா
50. எல் ஓ வீ ஈ லவ்தான் எல்போர்டு அல்ல நான்தான் – விதி
51. தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ் – இளஞ்சோடிகள்
52. புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என – ஊரும் உறவும்
53. இராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே – தீர்ப்புகள் திருத்தப்படலாம்
54. ஆயிரம் பிறைகள் காணும்வரை அலைகள் ஓசை அடங்கும்வரை – தூக்குமேடை
55. காற்று நடந்தது மெல்ல மெல்ல காதல் கவிதைகள் சொல்ல சொல்ல – துணை
56. அழகான பட்டுப் பூச்சி ஆடை கொண்டது – ரங்கா
57. பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு – ரங்கா
58. உன்னை அழைத்தது கண் உறவை நினைத்தது பெண் – தாய்வீடு
59. மாமா மாமா ஏன் பார்த்தே மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன் – தாய்வீடு
60. ஓ முதல் முறை தொடுவது சுகம் – தூரம் அதிகம் இல்லை
61. ஓடைத் தண்ணீரில் மீனாட ஊதாப் பூவோடு தேனாட – நினைவுகள்
62. தேவீஇ நீயின்றி நானேதம்மா ஓகோஒ என்னுயிர் நீதானம்மா – நிரபராதி
63. நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் – பௌர்ணமி அலைகள்
64. முல்லைக்கொடி அல்லிக்கொடி முத்தங்களை எண்ணிக்கடி – பந்தம்
65. மாலை வருகிற நேரம் ஏனோ ஒருவகை தாகம் – சிதம்பர இரகசியம்
66. மந்தாரப்பூவோ மஞ்சள் நிலாவோ – நீதியின் நிழல்
67. சொர்க்கத்தின் வாசல் எங்கே சொல்லட்டும் கண்கள் இங்கே – மங்கம்மா சபதம்
68. பனிவிழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ – பன்னீர் நதிகள்
69. மாலை நேரம் சுகம் தேடும் நேரம் உனைப் பாராமலே மனம் பசியாறுமா – மௌனம் கலைகிறது
70. கண்ணன் யாருக்குச் சொந்தம் என்றும் இராதைக்குச் சொந்தம் – மௌனம் கலைகிறது
71. அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே – சம்சாரம் அது மின்சாரம்
72. வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது – திருமதி ஒரு வெகுமதி
73. மரகத வள்ளிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் – அன்புள்ள அப்பா
74. மாசி மாசம்தான் கெட்டி மேளதாளம்தான் – ஊர்க்காவலன்
75. மல்லிகைப் பூவுக்குக் கல்யாணம் மண்ணில் இறங்குது ஆகாசம் – ஊர்க்காவலன்
76. கொண்டைச் சேவல் கூவும் நேரம் – எங்க சின்ன இராசா
77. மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா – எங்க சின்ன இராசா
78. சிட்டுக் குருவி தொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க – வீரபாண்டியன்
79. சிலுசிலுக்குது கிளுகிளுக்குது மனம் தன்னாலே – ஆளைப் பார்த்து மாலை மாத்து
80. ஓர் ஆயிரம் பௌர்ணமி நிலவுபோல் – என் இரத்தத்தின் இரத்தமே
81. அன்றொரு நாள் அன்றொரு நாள் அந்தி நிலாவைக் கண்டேன் – ஆரத்தி எடுங்கடி
82. மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா – அம்மா பிள்ளை
83. குக்குக்கூ குக்குக்கூ காட்டுக்குள்ளே சங்கீதம் – மனிதன் மாறிவிட்டேன்
84. இனிய தென்றலே இரு கைகள் வீசி வா – அம்மா பிள்ளை
85. மூங்கில் இலைக் காடுகளே முத்து மழை மேகங்களே – பெண்மணி அவள் கண்மணி
86. சந்தோசமே உல்லாசமே சங்கீதமே – வரவு நல்ல உறவு
87. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் – இதயத் தாமரை
88. ஓ மை லவ் கண்ணான என் கண்மணி – இதயத் தாமரை
89. யாரோடு யாரென்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா – இதயத் தாமரை
90. உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் – இதயத் தாமரை
91. வண்ண விழியழகி வாசக் குழலழகி மதுரை மீனாட்சிதான் – ஆடி வெள்ளி
92. வாய்க்கா வரப்புக்குள்ள சேலை மறைப்புக்குள்ள – உத்தம புருசன்
93. பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா – கடமை
94. சந்தனப் புன்னகை மின்னிடும் சிந்திய கன்னிகை மந்திர மல்லிகைதானே – நாடோடி இராஜா
95. வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது – ஜோதிமலர்
96. நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்சே – கண்ணில் தெரியும் கதைகள்
97. வானம் அருகில் ஒரு வானம் – நியாயத் தராசு
98. சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் தமிழ் நாளும் தரும் சிந்தாமணியோ – விழியோரக் கவிதை
99. கல்யாணப் பெண்போல கண்சாயும் பெண்ணே – நியாயத் தராசு
100. ஓ வெண்ணிலா உன் கண்ணிலா நீ மின்னலா பூந்தென்றலா – சட்டத்தின் திறப்பு விழா

Comments (0)
Add Comment