விஜய் தேவரகொண்டா உடன் இணையும் மிருணாள்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் VD13 / SVC 54 படம் தொடக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா – பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ்.

‘கீத கோவிந்தம்’, ‘சர்க்காரு வாரிபட்டா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் பரசுராம் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் இணைந்த இரண்டாவது படம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கிளாப் அடிக்க, கோவர்தன் ராவ் தேவரகொண்டா முதல் காட்சியை இயக்க, பிரபல பைனான்சியர் சத்தி ரங்கய்யா கேமராவில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ’சீதாராமம்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமாகி தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

Comments (0)
Add Comment