கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா ஒரு கலை இலக்கிய சங்கமமாக நிகழ்ந்தது.
பைரவி சிவா, வம்சிக் சிவா, கதிர்வேலு ஆகியோர் வழங்கிய ஆப்பிரிக்க இசைக்கருவிகளுடன் புதுமையான இசை நிகழ்வு நடந்தது.
இந்திரனின் கவிதைகள் கூத்துப் பட்டறையைச் சேர்ந்த கலைஞர்கள் மூலம் வெளி ரங்கராஜன் இயக்கத்தில் நாடகமானது.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.
முன்னாள் தஞ்சைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவருமான இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.
நடிகர் ஆர்.சிவகுமார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கதை சொல்லி பவா.செல்லதுரை, இயக்குநர் ஞான ராஜசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஏழு புத்தகங்களின் நூல் வெளியீடும் நடந்தது எழில்முத்து எழுதிய ‘இந்திரன் காலமும் கருத்தும்’ நூலை நா.வே.அருள் வெளியிட ராம்ஜி நரசிம்மன் பெற்றுக்கொண்டார்.
நா.வே. அருளின் இந்திரஜாலம் நூலை மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். மஹேஷ்குமார் எழுதிய ஒரு புத்த மதியம் நூலை எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட மு.வேடியப்பன் பெற்றார்.
கோ. வசந்தகுமாரனனின் அரூப நர்த்தனம் நூலை பவா செல்லத்துரை வெளியிட
இளங்கவிஅருள் பெற்றுக்கொண்டார்.
கோ. லீலாவின் கறுப்பு எழுத்து நூலை சுப்ரபாரதி மணியன் வெளியிட டாக்டர் சுதாமன் பெற்றார்.
இந்திரனின் பசித்த தலைமுறை நூலை ஞான.ராஜசேகரன் வெளியிட பத்திரிகையாளர் சுவாமி பெற்றுக்கொண்டார்.
அடுத்த இந்திரனின் காற்றுக்குத் திசை இல்லை நூலை ஜின்னா அஸ்மி வெளியிட விடுதலை சிகப்பி பெற்றுக்கொண்டார்.
இந்திரனைப் பற்றிய “இந்திரன் காலம்”, “கடவுளுக்கு முன் பிறந்தவன்” என்ற இரண்டு ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன.
இந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். கோ.வசந்தகுமாரன் நன்றியுரை ஆற்றினார்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக தன் 75வது பிறந்த நாளை இலக்கிய நண்பர்கள் புடைசூழ கேக் வெட்டி கொண்டாடினார் இந்திரன்.
தனது புத்தகங்களை வழங்கி இந்திரனை வாழ்த்தினார் நடிகர் ஆர்.சிவகுமார். சுவையான மதிய உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.