மெக்சிகோ நாட்டிலுள்ள கான்கன் நகரில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர். சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குள் இருக்கும் இதில் 500 சிலைகள் இருக்கின்றன.
இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்லர் என்ற சிற்பியும் ஐந்து மெக்சிகோ சிற்பிகளும் சேர்ந்து இந்தச் சிலைகளை வடித்துள்ளனர்.
இதில் டெய்லர் வடித்த சிலைகள் அதிகம். 2009-ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்ட மியூசியம் நவம்பர் 2010-ல் திறக்கப்பட்டது.
ஸ்கூபா டைவிங் முறையிலும் வழிகாட்டுநரின் உதவியுடனும் தான் அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியும் என்றாலும் வருடத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் குறைவில்லாமல் சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.
இந்த மியூசியம் பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-நன்றி: தினந்தந்தி