தெய்வீகக் குரல்.. தெவிட்டாத ஜென்ஸி!

“தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்..
கேட்டாலே போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்…”
– இன்னிசை இளவரசி ஜென்சி பாடியது.

ஜென்ஸி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது 1978ஆம் ஆண்டில்தான். அப்போது இருந்து இப்போது வரைக்கும் ஜென்ஸி சினிமாக்களில் பாடிக்கொண்டு இருந்திருந்தால், கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஆனால் அவர் தமிழில் பாடுனது வெறும் 4 ஆண்டுகள் மட்டும்தான். அந்த 4 வருடத்தில் தான் அவர் பாடின எல்லா ஹிட் பாடல்களும் இருக்கு.

தமிழில் மொத்தம் மூன்று இசையமைப்பாளர்களின் இசையில்தான் பாடியிருக்கார். அவர் தமிழில் மொத்தமாக பாடிய 29 பாடல்களில் 27 பாடல்கள் இளையராஜாவோட இசை.

அதையும் கடந்த கங்கை அமரன் இசையில் ஒரு பாடல், சங்கர் கணேஷ் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கார்.

ஜென்ஸியை தமிழில் அறிமுகப்படுத்தியதும் ராஜாதான்; அதிக வாய்ப்புகள் கொடுத்ததும் ராஜாதான்.

பாடல்கள் பாட வைப்பதைத் தாண்டி ஜென்ஸியை வைத்து நிறைய ஹம்மிங் போர்ஷன் எடுப்பார்.

பாடல்களில் வரும் ஹம்மிங்கைத் தாண்டி கிழக்கே போகும் ரயில் படத்தில் படம் முழுக்க பின்னணி இசையில் வரும் எல்லா ஹம்மிங்கையும் ஜென்ஸிதான் கொடுத்திருப்பார்.

வெறும் 29 பாடல்கள் பாடிய ஒரு பாடகிக்கு, அவங்க பாடிய பாடல்களை தினமும் கேட்கிற தமிழ்நாட்டு மக்களும், தமிழ் பாடல்களை கேட்கிற பலரும் ஜென்ஸிக்கு ரசிகர்/ரசிகைகளாகத்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முள்ளும் மலரும் – அடி பெண்ணே,
பிரியா – என்னுயிர் நீதானே,
புதிய வார்ப்புகள் – தம்தன தம்தன தாளம் வரும் மற்றும் இதயம் போகுதே,
நிறம் மாறாத பூக்கள் – ஆயிரம் மலர்களே,
உல்லாச பறவைகள் – தெய்வீக ராகம்,
திரிபுரசுந்தரி – வானத்துப் பூங்கிளி
வட்டத்துக்குள் சதுரம் – ஆடச் சொன்னாரே
சொன்னது நீதானா – அலங்கார பொன் ஊஞ்சலே
                                           – இரு பறவைகள்
அன்பே சங்கீதா – கீதா சங்கீதா இளையராஜா ஜெயச்சந்திரன், ஜென்சி
கடவுள் அமைத்த மேடை  – மயிலே மயிலே
பகலில் ஒரு இரவு – தோட்டம் கொண்ட ராசாவே
அழகே உன்னை ஆராதிக்கிறேன் – ஹேய் மஸ்தானா
முகத்தில் முகம் பார்க்கலாம் – அக்கா ஒரு ராஜாத்தி
பூந்தளிர் – ஞான் ஞான் பாடும்
எல்லாம் உன் கைராசி – நான் உன்னைத் திரும்பத் திரும்ப
ஜானி – என் வானிலே
கரும்பு வில் – மீன்கொடி தேரில்
டிக் டிக் டிக் -பூ மலர்ந்திட நடமிடும்
அலைகள் ஓய்வதில்லை – காதல் ஓவியம்
                                                    – வாடி என் கப்பைக்கிழங்கே
                                                    – விழியில் விழுந்து
பனிமலர் – பனியும் நானே மலரும் நீயே
ஈரவிழிக் காவியங்கள் – என் கானம் இன்று அரங்கேறும்
எங்கேயோ கேட்ட குரல் – ஆத்தோர காத்தாட
மெட்டி கல்யாணம் – என்னை முடிக்க
பூத்து நிக்குது காடு – எச்சில் இரவுகள்

–  என, ஜென்ஸி நம் மனதில் விதைத்த பாடல்கள் ஏராளம்.
கேரளாவில் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவங்கதான் ஜென்ஸி. சின்ன வயசுல இருந்தே இசையை கத்துக்க ஆரம்பிச்சவங்க 10 வயதில் இருந்தே மேடைகளில் பாட ஆரம்பிச்சாங்க.

அப்படி ஒரு மேடைக் கச்சேரியில் பாடகர் யேசுதாஸோடு ஜென்ஸி பாடும் போது அவங்களோட குரல் பிடித்துப்போக, தொடர்ந்து யேசுதாஸோடு கச்சேரிகளில் பாடுனாங்க.

இந்தப் பொண்ணோட திறமை கச்சேரிகளோடு நின்னுடக்கூடாதுன்னு ஜென்ஸியைப் பற்றி இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறார் யேசுதாஸ்.

பொதுவாக யாரையும் சிபாரிசு செய்யாத யேசுதாஸ் ஒரு பொண்ணுக்காக சிபாரிசு செய்கிறாரே என இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட இளையராஜா, நாளைக்கே என்னை வந்து பார்க்கச்சொல்லுங்க என்றிருக்கிறார்.

ஜென்ஸியும் அடுத்த நாளே இளையராஜாவை சந்தித்து சில பாடல்கள் பாடி காட்டியிருக்கிறார்.

அவருக்கும் குரல் பிடித்துப்போக அன்று மாலையே திரிபுரசிந்தரி எனும் படத்தில் எஸ். ஜானகியோடு சேர்ந்து பாட வைத்திருக்கிறார்.

அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்த இளையராஜா, ஜென்ஸி ஒவ்வொரு முறையும் ரெக்கார்டிங்கிற்காக கேரளாவில் இருந்து சென்னை வருகிறார் என்பதால் ‘சென்னையிலேயே ஒரு வீடு எடுத்து தங்கினால், நிறைய பாடல்கள் பாடலாம். வேறு இசையமைப்பாளர்களும் வாய்ப்பு கொடுப்பார்கள்’ என சொல்லியிருக்கிறார்.

ஆனால், ஜென்ஸிக்கு கேரளா அரசு பள்ளியில் பாட்டு டீச்சர் வேலை கிடைத்ததால் அவரால் சென்னைக்கு வர முடியவில்லை.

இதற்கிடையில் அவருக்கு வேலை கிடைத்ததால் இனிமேல் படங்களில் பாட மாட்டார் என ஒரு தவறான செய்தியும் சென்னையில் சுற்றியிருக்கிறது.

ஆனால், இந்த செய்தி உண்மையா இல்லையா என்பது தெரியாமல் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஜென்ஸியும் தமிழில் நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நமது பாடல்கள் எல்லாம் ஃபேவரைட் என்பது தெரியாமலேயே வாய்ப்பு வராததால் அவரது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இப்படித்தான் அவருக்கும் தமிழ் சினிமா இசைக்குமான தொடர்பு கட்டாகி இருக்கிறது.

ஜென்சி 1983-ல் கிரெகரி தாமஸ் என்ற மலையாளத் தொழிலதிபரை மணந்தார்.

இவர்களுக்கு நித்தின் என்ற மூத்த மகனும், நூபியா என்ற இளைய மகளும் இருக்கிறார்கள்.

ஆனால், எது எப்படியே அவர் பாடிய அந்த 29 பாடல்களே நமக்குப் போதும் இன்னும் பல வருடங்களுக்கு கேட்டு கேட்டு ரசிக்க.

நன்றி; முகநூல் பதிவு

Comments (0)
Add Comment