இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில் 3 இடங்கள் உட்பட உலகில் 9 பெரிய முருகன் கோவில்களை நிறுவ, லண்டனைச் சேர்ந்த சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி முடிவெடுத்துள்ளார்.
தமிழ்க் கடவுளான முருகனின் நாமத்தை உலகமெல்லாம் பரப்ப, திடசங்கல்பம் பூண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
லண்டன் மாநகரில் மிகப்பெரிய ஆலயத்தை புணரமைத்துக் கட்டியுள்ளனர்.
இதேபோல், சுவிஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில், ஈழத் தமிழர்களோடு இணைந்து கோவில்களைக் கட்டும் பணியில், சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி ஈடுபட்டு வருகிறார்.
கனடாவில் ஞான வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.