இடையூறுகளே மனிதனை செதுக்குகிறது!

பல்சுவை முத்து :

அழகற்ற, எவரும் விரும்பாத ஒரு கல் மலையின் மீதிருக்கிறது. அந்தக் கல் மலையிலிருந்து சிறிய ஓடை நீரில் அடித்து வரப்படுகிறது. பல வருடங்கள் கடந்தன. 

கல் கடற்கரையை வந்தடைகிறது. அலைகள் அதனை கடலுக்குள் இழுத்துச் செல்லாமல், கடற்கரையில் தள்ளி விடுகிறது. நீண்ட பயணம், வேர்கள், கற்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என பலவற்றைக் கடந்து தற்போது கடற்கரை மணலில் உள்ளது.

பார்ப்பதற்கு அழகாக உள்ளது. எல்லோரும் எடுத்து பார்த்து ரசிக்கின்றனர். அது சாதாரணக் கல் அல்ல ‘கூழாங்கல்’.

சாதாரண கல் கூழாங்கல்லாக மாறுவதற்கு எவ்வளவு நாட்கள், எத்தனை இடையூறுகள். மனிதனும் அவ்வாறானவன். ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ‘கூழாங்கல்லுக்கு’ ஒப்பானவர்களே!.

– கன்பூசியஸ்

Comments (0)
Add Comment